Saturday, October 7, 2017

Get Water from AIR - Techknowledge



காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள, மும்பை பெண் மெஹர் பண்டாரா: 2004ல், அமெரிக்க விஞ்ஞானி மூலம், இந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டேன். இதை இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தும் முயற்சியில், www.watermakerindia.com என்ற வலைதளம் மற்றும் நிறுவனத்தை துவங்கினேன்.நாங்கள் தயாரித்த இயந்திரத்தை, டில்லியில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சியில் விளக்கிய போது, சாதனத்தை சுற்றி வந்த பார்வையாளர்கள், கண்ணுக்கு தெரியாமல் எங்கிருந்தாவது தண்ணீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளனவா என, சந்தேகத்துடன் பரிசோதித்தனர்.வீட்டில் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியின் தொழில்நுட்பம் தான், இதில் பயன்படுத்தப்படுகிறது. காற்று மண்டலத்தில் உள்ள ஈரத்தின் அடர்த்தியை குளிர செய்து, இதில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. பின் வடிகட்டி, சுத்தமான நீர் எடுக்கப்படுகிறது.
மின்சாரத்தில் செயல்படும் இந்த இயந்திரம், 25 - 32 டிகிரி வெப்பநிலையில் இயங்கும் போது, 65 - 75 சதவீதம் ஈரப்பதம் கிடைக்கும்.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய தர நிர்ணயக் கழகத்திடமிருந்து, இந்த இயந்திரத்தின் மூலம் பெறப்படும் நீர், பாதுகாப்பான குடிநீர் என்பதற்கான சான்றிதழை பெற்றுள்ளோம். இவற்றை விளக்கி கூறி, மக்களிடம் ஆர்டர்களை பெற ஆரம்பித்தோம்.ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் உள்ள ஜாலிமுடி கிராமத்தில், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. அந்த ஊரின் பஞ்சாயத்து, தீர்வு தேடி என்னை அணுகியது. அங்கு, 2009ல், இந்த இயந்திரத்தை நிறுவிக் கொடுத்தேன்.உலகிலேயே முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தை பெற்ற ஜாலிமுடி, இன்று வரை அதன் வாயிலாக, தன் தண்ணீர் தேவையை வெற்றிகரமாக ஈடுசெய்து வருகிறது. 2015ல், இரண்டாவது காற்று நீர் நிலையத்தை, குஜராத் மாநிலம், காந்தி கிராமத்தில் நிறுவிஉள்ளோம்.வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்த வசதியாக, 120 லி., கொள்ளளவுள்ள சிறிய இயந்திரம் மற்றும் 5,000 லி., கொள்ளளவுள்ள இயந்திரம் தயாரித்து, இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறேன்.பெண்கள் ஒரு புதிய முயற்சியை எடுக்கும் போது, பாராட்டுகளை விட, எதிர்ப்பு, கேலிகளே முதலில் கிளம்பும். அவற்றை கடந்து, வெற்றிக்காக காத்திருக்க வேண்டும்.தொடர்புக்கு: 022 - 42304100; 44222111.


Reference : Date :08.10.2017
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

SKY -APT Assignment Questions 2017

SKY -APT  Assignment Questions 2017






Monday, September 11, 2017

How you choose Healthy kid - For New couples Tamil - Thirumoolar

திருமூலரின் திருமந்திரத்தில் -
( ஆண்/ பெண் குழந்தை பிறக்க )
குழந்தை குறையில்லாது பிறக்க, "உடல் உறவு மூலம் நல்ல குழந்தை
உண்டாக " ( நமது பாரம்பரிய ரகசியம் ) திருமூலர் சொல்லும் அபூர்வ ரகசியம். !!!
புரிய கூடியவங்க புரிஞ்சி கொள்ளுங்கோ....?
நாள் :- 30.08.17
(உறவின் போதே ஆண்/பெண்/அலி/திறமை/ஊனம் நிற்ணயிக்க படுகிறது)
மாண்பதுவாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம்பதி செய்தான் அச் சோதி தன் ஆண்மையே. (திருமந்திரம் 477)
477. இறைவன் தாய் தந்தை வழி உடலைப் படைக்கின்றான் :
உயிர்க்கு ஆண், பெண், அலி என்ற வேறுபாடு இல்லை. பெருமையுடனே வளர்கின்ற ஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ காண்பது கற்பனையாகும். அப்படிப்பட்ட உயிருக்கு ஏற்ற உடலை தாய் தந்தையின் தன்மையைக் கொண்டு படைப்பது சிவபெருமானின் வல்லமையாம்.
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண்இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம் 478)
478. கருவில் ஆண் பெண் மாற்றம் அமையும் விதம் :
ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் ஆண் ஆகும். பெண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் பெண்ணாகும். ஆண் பெண் பண்பு சமமானால் அவ்வுயிர் அலியாகும். ஆள் வினை முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாய்ப் பிறக்கும். அது உலகை ஆளும். கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மை இருக்குமானால் சுக்கிலம் பாய்வது நின்று விடும்.
பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. (திருமந்திரம் 479)
479. யோகி சுக்கிலத்தைப் பாய்ச்சல் :
ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கிடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டு. அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கிடை ஓடி விழுந்தால் அந்தஉயிரின் வாழ்வு எண்பதாண்டு. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவை இப்படி நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு. யோகி வேண்டியபடி சுக்கிலத்தைச் செலுத்தி விரும்பியபடி குழந்தை பெற முடியும்.
பாய்கின்ற வாயுக் குறையின் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே. (திருமந்திரம் 480)
480. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவுக்கு ஏற்பக் குழந்தையின் அங்கம் அமைதல்:
சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைந்திடின் குழந்தையானது குட்டையாய்ப் பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின் முடமாகும். அவ்வாயு தடைப்பட்டால் குழந்தை கூனாய்ப் பிறக்கும். ஆனால், ஆராய்ந்து பார்த்தால், பெண்களுக்கு வாயு இல்லை.
மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. (திருமந்திரம் 481)
481. கரு வளரும் காலத்தில் தாயின் வயிறு இருக்க வேண்டிய நிலைமை :
அன்னையின் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு அந்த அன்னையின் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்த புத்தியுடையதாய் விளங்கும். அவள் வயிற்றில் நீர் மிகுமானால் அந்தக் குழந்தை ஊமையாய் விடும். மலமும் நீரும் மிகுந்து இருக்குமானால் அக்குழந்தை குருடாகிவிடும்.
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும்கொண்ட கால் ஒக்கிலே. (திருமந்திரம் 482)
482. மூச்சுக் காற்றின் இயல்புக்கு ஏற்பக் குழந்தையின் பால் வேறுபாடு அமையும்:
இன்ப நுகர்ச்சியின் போது ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு வலது பக்க நாசியில் (சூரிய கலையில்) இயங்கினால் ஆண் குழந்தையாகும்.
ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு இடது பக்க நாசியில் (சந்திர கலையில்) இயங்கினால் பெண் குழந்தையாகும்.
ஆணின் மூச்சு வலது பக்க நாசியிலும், இடது பக்க நாசியிலும் இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.
சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவுடன் அபானன் எனப்படும் மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்.
கொண்டநல் வாயு
இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமளம் ஆயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோள்வளை யாட்கே. (திருமந்திரம் 483)
483. உயிர்ப்பின் இயக்கத்து ஏற்பக் கரு அமைதல் :
ஆண் பெண் இருவருக்கும் உயிர்ப்பு ஒத்து இருக்குமானால் கருவில் உள்ள குழந்தை அழகாக விளங்கும். புணரும் அக்காலத்தில் அந்த இருவருக்கும் உயிர்ப்புத் தடுமாறினால் பெண்ணுக்குக் கரு உண்டாக வாய்ப்பு இல்லையாகும்.
கோள்வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால்வளை உள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப்
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உரு ஆமே. (திருமந்திரம் 484)
484. பொற்சிலை எனப் பிறக்குமாறு :
பெண்ணின் வயிற்றில் அமைந்த குழந்தை அண்ணாக்கினுள்ளே விளங்கும் பேரொளி போன்றதாகும். அக் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழு வடிவத்தைப் பெறும்.
குழந்தை குறையில்லாது பிறக்க திருமூலர்
சொல்லும் தகவல்!!!
***********************************************************
*********************
“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது.
அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு
நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி
அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன்
கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில
வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்
என்கிறார் திருமூலர்.( மேற்படி தகவல்களை
கூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான
திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6
ஆயிரம் முதல் கி.மு.100 வரையில்
வாழ்ந்ததாக கூறுகிறார்கள்)
ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது
என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான்
என்கிறார் திருமூலர்.
தாம்பத்திய உறவின்
போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால் குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு நிலையை அறிந்து, பொறுமை காத்து, மனைவியுடன் கூடிக் குலாவி கலவி செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்.
கணவனும், மனைவியும் கூடும் முறையால்,
எப்படிப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பதற்கு
திருமூலர் தரும் விளக்கம்......
மனைவியுடன் கணவன் உறவு கொள்ளும்போது அவனது சுவாசமானது
சீரான அளவோடு பாய வேண்டும்.
அவ்வாறு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் குறை எதுவும் இருக்காது.
உறவின் போது ஆணின் வலது நாசி வழியாக சுவாசம் சென்றால் ஆண் குழந்தை உருவாகும்.
சுவாசம் இடது பக்கம் சென்றால் அது பெண்
குழந்தை உருவாக காரணமாகும். இரு நாசியின் வழியாகவும் மூச்சு ஒரே மாதிரி வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கையாக இருக்கும்.
ஆணின் சுவாசமானது அளவில் குறைந்து
போனால் பிறக்கும் குழந்தை குள்ள வடிவமாக? இருக்கும்.
சுவாசம் இயல்பான நிலையில் இல்லாமல்
இளைத்து வெளிப்படுமானால் பிறக்கும்
குழந்தை முடமாகும்.
சுவாசத்தின் அளவு குறைந்தும்,
திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும்
குழந்தைக்கு கூன் விழும்.
இப்படி, தனது திருமந்திரத்தில் விளக்கம் தரும் திருமூலர், ‘அந்த‘ உறவின்போது பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும்
என்பதையும் பட்டியலிடுகிறார்.
கூடலின்போது பெண்ணின் வயிற்றில் மலம்
சரிவர கழியாமல் தங்கி மிச்சம் இருந்தால்
பிறக்கும் குழந்தை மந்த குணம் கொண்டதாக
இருக்கும்.
இதுபோல், பெண்ணின் உடலில் சிறுநீர்
தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை
ஊமையாகவும், மலம், சிறுநீர் இரண்டும்
சரியான அளவில் தேங்கி இருக்குமானால்
பிறக்கும் குழந்தை குருடாகும் என்கிறார்.
சரி... எந்த நிலையில் தான் நல்ல,
ஆரோக்கியமான குழந்தை பெற முடியும்
என்று கேட்கிறீர்களா? அதற்கு திருமூலரின்
பதில்.
தாம்பத்திய உறவின்போது ஆண் &பெண்
இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக
இருக்க வேண்டும்.
அவ்வாறு மூச்சு வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை) சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த
அழகினை உடையதாக இருக்கும்.
ஆண் தக்க மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன் எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி, கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில் மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற முடியும். அவ்வாறு இருக்கும் போது,
குழந்தையின் தோற்றத்திலும் தான்
விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும்.
இப்படி அறிவுரை வழங்கும் திருமூலர், அந்த
நேரத்திற்கு எப்படி தயாராவது என்பது
பற்றியும் கூறியுள்ளார்.
உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே
திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும்
தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி,
அவற்றை வெளியேற்றி விட வேண்டும்.
ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும்
இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில் அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க வேண்டும்.
தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை
ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும்.
அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக்
கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை
வெளியிட வேண்டும். இதில் வேகம்
காட்டுவது வீண் கரு கலைதலுக்கு
ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.
உடலுறவில் கணவனும் மனைவியும்
****************************************
மாதம் ஒன்றுக்கு எத்தனை முறை கணவனும்
மனைவியும் ஒன்று சேரலாம்?
தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும் பகல்,இரவு,எந்த நேரத்திலும் தாம்பத்தியம் கொண்டுவிடுகிறார்கள்.
இதன் காரணமாக ஆண்கள்,பெண்கள் தேகம் வெளுத்து ,வாடி,வருந்தி வலுவற்று விடுகின்றனர்.
ஆகாரம், மைதுனம் ,நித்திரை,பயம் இந்த
நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இரு பாலரும் இருத்தல் அவசியம்.
இதில் பாதிப்பு ஆண்களுக்கே அதிகம்.பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.இதனால் ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும்,என்று இராமலிங்க ஸ்வாமிகள் சொல்லியுள்ளார்.
ஆகாரம் ,மைதுனம் ,ஆகிய இரண்டிலும் மிக்க
ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும்.
இல்லை எனில் தேஹமானது அதி சீக்கிரத்தில் கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும் இராமலிங்க ஸ்வாமிகள் கூறுகிறார்.
சுக்கிலமாகிய திரியை விசேஷமாக
தூண்டி ,அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு
செய்தால் ,திரியானது அணைந்து போய் ,ஆயுளாகிய பிரகாசத்தை பாழ்படுத்திவிடும் .
960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம்?
செய்து ஆபாசப்பட்ட சுக்கிலத்தை வெளிப்படுதிவிடவேண்டும்
என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.60
நாழிகை என்பது ஒரு நாள் .960
நாழிகை என்பது 16 நாளாகும் இந்த
கணக்குப்படி மாதம் இரண்டுமுறை மட்டுமே தனது நன் மனையாளை மருவுதல் வேண்டும்.இதற்க்கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக நேரிடுமென்றும் ,ஆண்களுக்குரிய வீரியமும்,
விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல் ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம்.பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில்
பிணி உண்டாகுமென்றும்,ருதுவில் பிரச்னையும் எற்படுமென்கிறது சாஸ்திரம்..
சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும்.ஆண்கள்
வீரியத்தை பலமுறை வெளியேற்றினால்
அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன் மூலம் அறியலாம்.
இவ்வாறு அபரிமிதமான இத்தம்
குறையவே ஜீவாக்கினி குறைகிறது.
ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத் தொழில் கெட்டு ,அதனால் தேஹம்
தளர்ந்து ,முகம் வெளுத்து ,கண்ணின்தகுதி குறைந்து கண்பார்வை மங்கி , ஜீரண சக்தி குறைந்து ,ஞாபக சக்தி குறைந்து,மொத்தத்தில் பலவீனமாகி ,கைகால்கள் நடுக்கம், மூட்டு வீக்கம் உண்டாகி,
நடைதளர்ந்து சோர்ந்து, பல தீராத
வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான் ..
எனவே தம்பதிகள் இந்த நடைமுறையை கையாண்டால் தேக சௌக்கியமுடன் நல்ல
குழந்தைகளை பெற்று வாழ்வில்
நலமடைவார்களென்று மனுஸ்மிர்தி கூறுகிறது.
" உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக" நமது பாரம்பரிய ரகசியம்
********************************************************************
உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல
நேரங்கள்: கணவனும், மனைவியும் கூடிய
நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும் பொது உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண் ஆகும்.
சுழிமுனை நடக்கும் போது உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது
அமாவாசையன்று கருவானால் கருப்பு
நிறமாகவும்,ஆறு விரல் உள்ளதாகவும்
குழந்தை பிறக்கும் தொலை தூரம் சென்று வந்த பொழுது உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை அறிவில்லாத குழந்தை ஆகும்.
அமாவாசை கழித்து பிரதமையில் கரு
உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும் அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால் அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.
முழு நிலவுவில் உடலுறவு கொண்டு
கருவானால் முடமாகவும், தண்டியாகவும்
குழந்தை பிறக்கும்.யானை வடிவில் இருக்கும்.
முழுநிலவு கழித்துப் பிரதமையில்
கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத் தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை பிறக்கும்.
பதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை
பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம், பித்தம்,
முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.
புணர்ச்சியின் போது பேசக்கூடாது.பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப் பிறக்கும்.
பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால்
குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும்.
உடலுறவு கொள்ளும் பொழுது வேறு
பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால்
அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது
நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.
பிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த
உடலுறவும் கூடாது.
வெள்ளிக்கிழமை மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு கொண்டு கருவானால்,மாறுகண் உள்ள குழந்தை பிறக்கும்.
ஒரு பெண் மாத விளக்கு ஆகி மூன்றாம் நாள்
உடலுறவு கொண்டபோது கருவானால்
குழந்தை திருடனாகப் பிறக்கும்.
நான்காம் நாள் கூடிக் கருவானால் குழந்தை
வறுமையில் வாடும்.
ஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை
கல்வியில் சிறந்து விளங்கும்.
ஆறாம் நாள் கூடிக் கருவானால் பெரியோர்கள் கருத்தைக் கேளாத குழந்தை பிறக்கும்.
ஏழாம் நாள் கூடிக் கருவானால் உண்மையை
பேசும்,ஈகை,இரக்கம்,நற்குணம் உடைய
குழந்தை பிறக்கும்.
எட்டாம் நாள் கூடிக் கருவானால் குழந்தை
தரித்திரத்தில் வாழும்.
ஒன்பதாம் நாள் கூடிக் கருவானால்
செல்வம்,வளம் நிறைந்து குபேரனாக வாழும்
குழந்தை பிறக்கும்.
பத்தாவது நாள் கூடிக் கருவானால் காமம்
மிகுந்து கெட்ட பழக்கம்,அவ மரணம் உள்ள
குழந்தை பிறக்கும்.
பதினொன்றாவது நாள் கூடிக் கருவானால்
நோயுள்ள குழந்தை பிறக்கும்.
பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால்
பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள
குழந்தை பிறக்கும்.
பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால்
அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும்
விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.
பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக
இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக் குழந்தை பிறக்கும்.
பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால் ஓர்
அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும்
உள்ள குழந்தை பிறக்கும்.
பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய
ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும்
ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.
குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டியநாள்கள்
****************************************************
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15
நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே
குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள்.
திருமணம் முடிந்து நான்காண்டுகளாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக
வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை
மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது உதவும்.
ஆனால்,சில ஆண்கள் தன் ஆண்மையை
உலகுக்குக் காட்ட உடனே பெற எண்ணி
ஓராண்டிலே குழந்தை பெற்றுக் கொள்வர்.
சிலருக்கு திருமணமாகி சில ஆண்டுகள்
ஆகியும் குழந்தை பிறப்பதில்லை.
குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள்
உண்டு. ஆண்களின் விந்தில், உயிரணு
இல்லாமல் இருத்தல் அல்லது உயிரணுக்களின்
எண்ணிக்கை குறைவாய் இருத்தல். பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு அல்லது கருப்பை பாதிப்பு.
பொதுவாக, குழந்தை இல்லை யென்றதும்
பெண்தான் காரணம் என்று ஆண் மறுமணம்
செய்து கொள்கிறான். இது தப்பு மட்டுமல்ல
குற்றமும் ஆகும்.
குழந்தை இன்மைக்கு பெண்ணைக் காட்டிலும் ஆணே பெரும்பாலும் காரணம். எனவே, இருவரும் சோதனை செய்து யாரிடம் குறை என்று கண்டு அதைச் சரி செய்ய வேண்டும்.
பெரும்பாலும் சரி செய்துவிட? முடியும். அந்த
அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.
குழந்தை பெற உரிய நாட்களில் உடலுறவு
கொள்ளாமையும் குழந்தையின்மைக்கு ஒரு
காரணம். எனவே, அந்த நாள்களை அறிந்து
உடலுறவு கொள்ள வேண்டும்.
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15
ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும்.
அதிலும் குறிப்பாக 14, 15
ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள்.
காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும்.
இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ
உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது.
இந்த உண்மை தெரியாததால் குழந்தை
பிறப்புத் தள்ளிப் போகிறது.
குழந்தை வேண்டாம் என்பவர்கள் மாத விலக்கு வந்தபின் 11, 12, 13, 14, 15 ஆகிய நாள்களில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
14, 15ஆவது நாள்கள்தான் உரிய நாள்கள்
என்றாலும், 11, 12, 13 நாள்களில் உடலுறவு
கொள்ளும்போது வெளியேறிய விந்து
பெண்ணுருப்பில் ஓரிரு நாள்கள் உயிர்வாழும்.
அதிலுள்ள உயிரணு மூலம் குழந்தை பெற
வாய்ப்பு வரும்.
அதனால், 11, 12, 13 ஆகிய
நாள்களும் விலக்கப்பட வேண்டும்.
பருவமடைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இந்த விவரம் அறிந்திருந்தால்
தேவையில்லாமல் பெண் கருவுறவும்,
கருக்கலைப்புச் செய்து உடல் பாதிக்கவோ
வேண்டிய நிலை வராது.
அவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி :-
**************************************************
திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களா நீங்கள்?
அப்படியானால் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை.
மற்றவர்கள் படிக்கவேண்டாம் என்றில்லை. படித்து பிறருக்கு ஆலோசனை கூறவேண்டும் என்று நினைப்பவர்களும் இதை படிக்கலாம்.
என்ன ஒரே சஸ்பென்சாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம் விசயம் அத்தனை முக்கியமானது.
அவசரம் வேண்டாம்
திருமணமான தினத்தன்று காலையில் முகூர்த்தம் முடிந்த உடனே இரவு நடக்கப்போகும் சாந்தி முகூர்த்தம் பற்றி பேசி புதுமணத் தம்பதிகளை திகிலில் ஆழ்த்துபவர்கள் தான் அதிகம் பேர் இருப்பார்கள். ஆனால் அவசரப்படாமல் ஆற அமர முதலிரவை வைத்துக்கொண்டால்தான் அது சுக இரவாக இருக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
தம்பதியர் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளும் இரவில் அதாவது முதலிரவில் நிம்மதியாக இருவரும் தூங்குங்கள் என்பதுதான் உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் அறிவுரை.
அடப்போங்க சார். யாருக்காவது முதலிரவில் தூக்கம் வருமா? என்று கேட்பது காதில் விழுகிறது. வேறு வழியில்லை கண்டிப்பாக அன்றைய தினம் தூங்கினால்தான் தொடரும் நாட்களில் சிக்கல் இல்லாமல் வாழ்க்கையை சந்திக்க முடியும் என்கின்றனர்.
ஏனெனில் என்னதான் சுற்றம் சூழ தாலி கட்டி மனைவி ஆக வந்து விட்டாலும் சந்தித்த முதல் நாளன்றே தாம்பத்ய உறவை தொடங்குவது சரியில்லை என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள்முதல் சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் ஆண், பெண் இருவருக்குமே ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். திருமண தினத்தற்கு வீட்டிலும், சத்திரத்திலும் ஒரே கூட்டமும் கும்மாளமுமாய், இருந்திருக்கும்.
தண்ணீர் மற்றும் கழிவறை பிரச்சினையினால் அவசரக்குளியல் என இருவரின் உடல்களுமே சுத்தமாக இருக்காது.
இதனால் பரவும் நோய்களும் அதிகம், இதனால் தான் திருமண தினத்தன்றே தாம்பத்ய உறவை வைத்துக்கொள்வது ஆரோக்கியமானதல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.
ஹனிமூன் நோய்கள்
முதல்நாளே உறவைத் துவங்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாம்.
பிறப்புறுப்பை பாதிக்கும் பல வியாதிகள் வர? வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.
அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் இந்த வியாதிகள் கட்டாயம் வருமாம்.
முதலிரவன்று இதமான வெந்நீரில் நன்றாக குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளை தவிருங்கள். அளவோடு மிதமான உணவாக உட்கொள்ளுங்கள். அன்றைய தினம் சம்பிரதாயத்திற்காக வைக்கும் பால், பழம், இனிப்புகளை சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. உடலும் மனமும் லேசாக இருந்தலே பாதி டென்சன் பறந்துவிடும்.
அன்பை பரிமாறும் வழி
முதல்நாளன்றே ஒருவருக்கொருவர் தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எதையாவது? செய்யப்போய் அதுவே சிக்கலாகிவிடும் ஜாக்கிரதை. இதனால் இருவருக்குமிடையே அதிருப்தி உருவாகலாம். எனவே முதலிரவன்று புதுமணத்தம்பதியர் இருவரும் மனம் விட்டுப்பேசிக்கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். விருப்பு, வெறுப்பு, குடும்ப சூழ்நிலை, பற்றியெல்லாம் பேசலாம்.
சின்னத் தொடுகை. மெல்லியதாய் ஒரு ஸ்பரிசம், போதும் அதுவே ஆயிரம் மடங்கு அன்பை இருவருக்குமிடைய உணர்த்துவதற்கு. தயக்கமும், கூச்சமும் களைந்த பின்பே தாம்பத்ய உறவை தொடங்குவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை என்கின்றனர் மருத்துவத்துறையினர். இந்த கட்டுரை பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல. காதல் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும்.
எனவே முதலிரவை, ஒரு நீ்ண்ட இனிய நாவலின் முன்னுரையாக கருதி நிதானமாக ஆரம்பியுங்கள். பிறகு பாருங்கள், வாழ்க்கை நாவலின் ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க இனிமையாக இருப்பதை உணர்வீர்கள்.
- *சித்தர்களின் குரல் shiva shangar*

Tuesday, September 5, 2017

SKY- Village Service Project -Contact

Village Service Project (WCSC – VSP)
கிராமப்புற மக்கள் அனைவருக்கும்
இலவசமாக மனவளக்கலை யோகாவை
கற்றுக் கொடுப்பதற்காக உலக சமுதாய சேவா சங்கம் ஒரு சிறப்பான திட்டத்தினை
“உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டம்”
(The World Community Service Centre – Village Service Project
சுருக்கமாக WCSC-VSP)
என்ற பெயரில் 2012 மார்ச் மாதத்தில் தொடங்கியது.
திட்டத்தின் பயற்சி முறைகள் :-
உடல் நலம் காக்க எளியமுறை உடற்பயிற்சிகள்
மன அமைதி பெற எளியமுறை தியானப் பயிற்சிகள்
உயிர்வளம் காக்க காயகல்பப் பயிற்சி
நட்பு நலத்திற்கு அகத்தாய்வு பயிற்சிகள்
சமூக நலனிற்கு கா்மயோக வாழ்க்கை நெறி பயிற்சி
செயல்படுத்தப்படும் திட்டங்கள்:-
மனவளக்கலை SKYYOGA பயிற்சி,
ஆரோக்கிய முகாம்கள்,
மாணவா்களுக்கு சிறப்புக் கல்வி
சுற்றுப்புற சுகாதாரம்,
மரம் வளா்த்தல்,
முதியோரை பாதுகாத்தல்
If any further assistance needed ,Please Call Us:
04253 288 733 ,744 ,755, 7598238733 , 9842268733,8903638630.

Tuesday, August 29, 2017

Human Boy Maintenance at its source -Tamil - சூட்சும விஞ்ஞானம்



1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?  நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது,
     விழிப்புணர்வு அற்ற தியானம்.
     தியானம் என்பது,
     விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
- முகநூல் பதிவு                      
[4:17 AM, 8/30/2017] Veerakumar YOGA: வாழ்க்கை மலர்கள்: ஆகஸ்ட் 30

மனைவி நல வேட்பு

 உலகில் இதுவரை தந்தை நாள் (Father’s day), தாயார் நாள் (Mother’s day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நலவேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள். மனைவி நலவேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய
[அருள் அன்னை லோகாம்பாள்] பிறந்த நாள் 30-8-ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30-ஆவது நாளை மனைவி நலவேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.

பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
 பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
 பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
 நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
 மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
வளர்க வேதாத்திரியம்.

Wife Appreciation Day -Tamil @ Vethathiriyam Usage



மனைவி நல வேட்பு

 உலகில் இதுவரை தந்தை நாள் (Father’s day), தாயார் நாள் (Mother’s day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நலவேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள். மனைவி நலவேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய
[அருள் அன்னை லோகாம்பாள்] பிறந்த நாள் 30-8-ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30-ஆவது நாளை மனைவி நலவேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.

பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
 பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
 பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
 நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
 மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
வளர்க வேதாத்திரியம்.
🌷🌷🌲🌲🌲🌷🌷

Saturday, July 8, 2017

Remedies for migraine by Vethathiri Maharishi

Steps to cure the Long waiting -Migraines



  1. Take Pure Honey
  2. Apply two drop of Honey  on  each each eye.
  3. Wait for around  40 minutes
  4. Wash your eyes gently
  5. Do for three Days(one day one time)

Thats all - now you are out of migraine



Monday, April 24, 2017

How to handle your task -in Tamil

* எதையும் அலட்சியமாக அணுககூடாது. சிறிய விஷயத்திலும் அக்கறையுடன் செயல்படு.
* அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையே.
* உழைப்பதற்கு இரு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் அளித்திருக்கிறார்.அதன் மூலம் நற்செயலில் ஈடுபடு. 
* அனுபவத்தால் எதையும் அறிய வேண்டும் என்பதில்லை. பெரியவர்களின் அறிவுரையை கேட்டாலே அனுபவம் கிடைத்து விடும்.
காஞ்சிப்பெரியவர்

Saturday, April 22, 2017

Husband wife Relationship Simple Story in Tamil

அன்பு
*******
ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.
இவ்வாறிருக்க ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.
ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.
நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.
அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள். அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள். அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.
தன் அன்பு மனைவியின் இறுதி கிரிகைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.
அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து
"
எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?
எனக் கேட்டான்.
அதற்கு அவன்
நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன்.
அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.
அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்" எனப் பதிலளித்தான்.

https://www.facebook.com/images/emoji.php/v8/f68/1/16/1f495.png💕பிறரின் குறைகள் கண்களுக்கு தென்படாமல் இருக்க சில வேளைகளில் நாமும் குருடன் போன்று பாசாங்கு காட்டுவது அவசியம்...