Sunday, March 26, 2017

Lean YOGA In Kuwait

If you think you want to learn YOGA..... yes you are in right place  to have  a healthy life.

You can contact us  to have  YOGA learning @
Abasiya
Salmiya
Mangaf
Fahahaeel
Abuhalifa ( Exclusively  for Ladies)

Contact : 66646971



What is Carpenter And Tailor Rule


AGNA -Meditation in Tamil

ஆக்கினையின் விஞ்ஞான உண்மை:
"ஆக்கினை" என்றால் "ஆளுமை" என்று பொருள். ஆக்கினை என்ற புருவமத்தியில் தவமியற்றுகிறபோது,
அதற்கு உட்புறமாக அமைந்திருக்கிற நாளமில்லாச் சுரப்பியான 'பிட்யூட்டரி' சுரப்பி நன்கு ஊக்குவிக்கப் படுகிறது. 'பிட்யூட்டரி'என்பது நமது உடலில் உள்ள ஏனைய சுரப்பிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் தலைமைச் சுரப்பி. அதன்மீது மனம் வைத்துத் தவமியற்றுவதால், ஆக்கினை தவம் ஆன்மீகத்திற்கேற்ற உடலியக்கத்தை ஏற்படுத்தித் தருகிறது. எனவே ,ஆக்கினை தவம் "ஆன்மீக வாழ்க்கையின் நுழைவாயில் " என்று அழைக்கப்படுகிறது.
ஆக்கினை என்ற புருவ மத்தியை, நெற்றிக்கண், ஞானக்கண்,மூன்றாவது கண், முச்சந்தி வீடு என்றெல்லாம் குறிப்பிடுவார்கள்.
நாம் செய்யும் தவறுகளை "குற்றம், குற்றமே"என்று இடித்துரைக்கும் "நெற்றிக் கண்ணே" ஆக்கினை.
மேலும்,ஆக்கினை தவத்தால் இன்னொரு முக்கியமான நன்மையும் உண்டு.நாம் எதைச் செய்தால், பின்னாளில் தீங்கு வருமோ,அதைச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. அதைத்தான் "ஆகாம்ய" கர்மம் நீங்கும் என்கிறார்கள்.அதாவது ஆ+காம்யம்=ஆன்மாவிற்கு இச்சையூட்டக் கூடிய வினைகள்.
தியானம் என்பது,ஆயிரம் நல்ல நண்பர்கள் கிடைத்ததற்குச் சமம்,அதன் முதல் படியே "ஆக்கினை".
காசி-வாரணாசி. வாரன் என்றால் புருவம்.நாசி என்றால் மூக்கு இரண்டுக்கும் இடையில் உள்ளது ஆக்கினை. புருவ மத்தியில் உயிர் ஆற்றலை மனம் கவனிப்பதே ஆக்கினை எனப்படுகிறது.
அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன்!!

---------------------------------Benefits of Thavam-------------

தியானம் (தவம்-Meditation)- தியானத்தின் பலன்'
* ஆக்ஞை தியானம்
புருவமத்தியில் மனம் செலுத்தி உயிரின் அசைவை நுண்ணிய ஆதிர்வாக தொடர்ந்து கவனிப்பது ஆக்ஞை தியானம்.
இத் தியானத்தில்
மனஅலை ஆல்பா (13 to 8 cps) நிலைக்கு குறையும்.
* துரிய தியானம்
உச்சந்தலையில் உயிரின் சுழற்சியை மெல்லிய உறசலாக தொடர்ந்து கவனிப்பது துரிய தியானம்.
இத் தியானத்திலும் மனஅலை ஆல்பா நிலையில் தான் இருக்கும். நீண்டநேர துரிய தியானத்தால் மனம் உடலுணர்வு நிலையை கடக்கும் போதுதான், மனஅலை தீட்டா (7 to 4 cps) நிலைக்கு குறையும்.
* துரியாதீதம்-இயக்கமண்டல தியானம்.
நிலம், நீர்,நெருப்பு, காற்று, விண் ஆகிய ஐந்து பௌதீகப் பிரிவுகளால் ஆன இயக்கப் பிரபஞ்சத்தை விண்துகள்களின் கூட்டு இயக்கமாக பாவனை செய்து , அதையே அகக்காட்சியாக தொடர்ந்து கவனி்ப்பது பேரியக்க மண்டல தியானம்.
இத் தியானத்தில் மனஅலை எளிதாக தீட்டா (7 to 4 cps) நிலைக்கு குறைந்துவிடும்.
* துரியாதீதம்-இருப்பு மண்டல தியானம்.
பஞ்சபூதங்களால் ஆன இயக்க மண்டலத்திற்குக் காரணப் பொருளைத்தான்(Origin of the universe) வேதங்களும் மதநூல்களும் ஆத்மா (மெய்ப்பொருள்), தெய்வம், கருப்பு(கிருஷ்ணம்)சிவம்(அறிவு), சுத்தவெளி, பிரம்மம், காந்தம், இறைவன்,அருவம் (உருவமற்றது),கடவுள்(GOD)என்றெல்லாம் கூறுகின்றன.
இக் கடவுள் நிலையைத்தான் Gravity,Blackhole, Darkness, Space,Magnetism என்று விஞ்ஞானம் கூறுகிறது.
எல்லாம் வல்ல, யாவும் அறிந்த, எங்கும் நிறைந்த தெய்வநிலையை கும்மிருட்டாக பாவனை செய்து அதையே தொடர்ந்து நினைப்பது துரியாதீத தியானத்தில் இருப்பு மண்டல தியானம்.
இத் தியானம் செய்வதால் இயங்கும் மூளை செல்களின் எண்ணிக்கை கூடும். அவற்றின் இரசாயனத் தன்மையும் மேம்படும்.
மனம் எதை நினைக்கிறதோ, அதுவாகவே மாறிவிடும் என்பது இயற்கை நியதி.
இத் தியானத்தில் தெய்வத்தையே நினைக்கும் மனம் தெய்வமாகவே மாறிவிடுவதை (Delta state of mind- சமாதிநிலை-ஆதிக்கு சமமான நிலை) அனுபவமாக உணர்கிறோம். அப்பொழுது மனதின் அடித்தளமே தெய்வம் (The other end of the Mind is God) என்பது அறிவுக்கு தெளிவாக விளங்கிவிடும். இத்தெளிவான அறிவுநிலையே "இறைஞானம்".
இந்த அறிவு நிலையில் தெய்வநிலை முதல் மனித மனம் வரை இயற்கையின் அமைப்பு, இயக்கம், விளைவுகள் யாவும் தெளிவாக விளங்கிவிடும்.
உடல்நலம் காக்கும் அறிவும்,பொருளீட்டும் அறிவும், மக்கள் உறவில் நட்புநலம் காக்கும் அறிவும்,மனநிறைவுக்கு மனம் பற்றிய அறிவும் உள்ளுணர்வாக(Intuition) முழுமையாக விளங்கிவிடும்.
எண்ணத்திற்கு வலிமை ஓங்கும். மனம் நல்லதையே நினைக்கும். நினைப்பதும் நடந்துவிடும்.
கவலையில்லாமல் வாழலாம். கவலையில்லாமல் வாழும் அறிவுத்தரமே "ஞானம்" என்று ஞானிகள் கூறுகின்றனர்.
ஆன்மாவை அறிந்தோரின் எண்ணிக்கை பெருகி வரும்போது, மனிதகுலம் அன்புநெறியில் வாழும். போர் பகை அச்சமின்றி, உழைத்துண்டு வளம் காத்து, நிகழ்கால இயற்கை இனபங்களைத் துய்த்து மக்கள் அமைதியாக வாழ்வார்கள்.
இதுவே " சமாதான வாழ்வு"
"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" என்கிறார் திருவள்ளுவர்.
"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை" என்கிறார் திருமூலர்.
எல்லோரும் எளிதாக இறைஞானம் (ஆன்மீக அறிவு) பெற துரியாதீத தியானமும், தெய்வநிலை
அறியாமல் திகைக்கும் மக்கட்கெல்லாம் தெளிவாக இறையுணர "பிரம்ம ஞானமும்' தந்த வேதாத்திரி மகரிஷி அவர்களை "அடுட்தந்தை" என்று அழைத்து மகிழ்கிறோம்
வாழ்க வேதாத்திரியம்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
ஆன்மாவை அறிந்து அமைதியாக வாழலாம்.அன்பர்களே வாரீர்!
விபரங்கள் அறிய:
வேதாத்திரியன் அருள்நிதி.வேதசுப்பையா
+917010955300
+919080942553

வாழ்க வளமுடன்