* எதையும் அலட்சியமாக அணுககூடாது. சிறிய விஷயத்திலும் அக்கறையுடன் செயல்படு.
* அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையே.
* உழைப்பதற்கு இரு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் அளித்திருக்கிறார்.அதன் மூலம் நற்செயலில் ஈடுபடு.
* அனுபவத்தால் எதையும் அறிய வேண்டும் என்பதில்லை. பெரியவர்களின் அறிவுரையை கேட்டாலே அனுபவம் கிடைத்து விடும்.
- காஞ்சிப்பெரியவர்
Monday, April 24, 2017
Saturday, April 22, 2017
Husband wife Relationship Simple Story in Tamil
அன்பு
*******
*******
ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.
இவ்வாறிருக்க ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.
ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.
நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.
அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள். அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள். அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.
தன் அன்பு மனைவியின் இறுதி கிரிகைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.
அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து
"எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?
எனக் கேட்டான்.
"எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?
எனக் கேட்டான்.
அதற்கு அவன்
நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன்.
அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.
அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்" எனப் பதிலளித்தான்.

💕பிறரின் குறைகள் கண்களுக்கு தென்படாமல் இருக்க சில வேளைகளில் நாமும் குருடன் போன்று பாசாங்கு காட்டுவது அவசியம்...
Subscribe to:
Posts (Atom)