Saturday, October 7, 2017
Get Water from AIR - Techknowledge
காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள, மும்பை பெண் மெஹர் பண்டாரா: 2004ல், அமெரிக்க விஞ்ஞானி மூலம், இந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டேன். இதை இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தும் முயற்சியில், www.watermakerindia.com என்ற வலைதளம் மற்றும் நிறுவனத்தை துவங்கினேன்.நாங்கள் தயாரித்த இயந்திரத்தை, டில்லியில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சியில் விளக்கிய போது, சாதனத்தை சுற்றி வந்த பார்வையாளர்கள், கண்ணுக்கு தெரியாமல் எங்கிருந்தாவது தண்ணீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளனவா என, சந்தேகத்துடன் பரிசோதித்தனர்.வீட்டில் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியின் தொழில்நுட்பம் தான், இதில் பயன்படுத்தப்படுகிறது. காற்று மண்டலத்தில் உள்ள ஈரத்தின் அடர்த்தியை குளிர செய்து, இதில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. பின் வடிகட்டி, சுத்தமான நீர் எடுக்கப்படுகிறது.
மின்சாரத்தில் செயல்படும் இந்த இயந்திரம், 25 - 32 டிகிரி வெப்பநிலையில் இயங்கும் போது, 65 - 75 சதவீதம் ஈரப்பதம் கிடைக்கும்.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய தர நிர்ணயக் கழகத்திடமிருந்து, இந்த இயந்திரத்தின் மூலம் பெறப்படும் நீர், பாதுகாப்பான குடிநீர் என்பதற்கான சான்றிதழை பெற்றுள்ளோம். இவற்றை விளக்கி கூறி, மக்களிடம் ஆர்டர்களை பெற ஆரம்பித்தோம்.ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் உள்ள ஜாலிமுடி கிராமத்தில், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. அந்த ஊரின் பஞ்சாயத்து, தீர்வு தேடி என்னை அணுகியது. அங்கு, 2009ல், இந்த இயந்திரத்தை நிறுவிக் கொடுத்தேன்.உலகிலேயே முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தை பெற்ற ஜாலிமுடி, இன்று வரை அதன் வாயிலாக, தன் தண்ணீர் தேவையை வெற்றிகரமாக ஈடுசெய்து வருகிறது. 2015ல், இரண்டாவது காற்று நீர் நிலையத்தை, குஜராத் மாநிலம், காந்தி கிராமத்தில் நிறுவிஉள்ளோம்.வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்த வசதியாக, 120 லி., கொள்ளளவுள்ள சிறிய இயந்திரம் மற்றும் 5,000 லி., கொள்ளளவுள்ள இயந்திரம் தயாரித்து, இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறேன்.பெண்கள் ஒரு புதிய முயற்சியை எடுக்கும் போது, பாராட்டுகளை விட, எதிர்ப்பு, கேலிகளே முதலில் கிளம்பும். அவற்றை கடந்து, வெற்றிக்காக காத்திருக்க வேண்டும்.தொடர்புக்கு: 022 - 42304100; 44222111.
Reference : Date :08.10.2017
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93
Subscribe to:
Posts (Atom)