Friday, March 20, 2020

Manavalakkali- What is in Tamil

மனத்தை வளப்படுத்தும் கலை மனவளக்கலையாகும். இதில் நான்கு அங்கங்கள் உள்ளன. 1. அகத்தவம். 2. அகத்தாய்வு 3. குணநலப்பேறு 4. முழுமைப்பேறு . நான்கிற்கும் மனமே விளைநிலம்.
மனம் தன திறமையும், வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சியே தவம். ஆக்கினை, துரியம், துரியாதீதம் முதலியவை செய்து மனவலிமையைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
மனம் தன்னைத் தூய்மை செய்து கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சியே அகத்தாய்வு ஆகும். எண்ணம் ஆராய்தல்,ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், நான் யார் என்ற பயிற்சிகள் மூலம் அகத்தை ஆய்வு செய்து கொள்ள முடியும்.
மனம் தன்னைத் தூய்மை செய்து கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சியே அகத்தாய்வு. ஆறு தீய குணங்களைச் சீரமைத்து, நற்குனங்களாக மாற்றி அடைவதே குணநலப்பேறாகும்.
தூய்மையில் பூரணத்தை அடைந்து அமைதியாக வாழ்வதே முழுமைப்பேறு.மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் பெற்று களங்கங்கள் முழுவதும் நீக்கி இத்தகைய நற்குணங்களில் சிறந்து ஓங்கி, இறைநிலையோடு ஒன்றி வாழ்வதே முழுமைப்பேறு.
"மனம் தன் திறமையையும் வல்லமையையும்
பெருக்கிக் கொள்ளும் பயிற்சியே 'தவம்".
"பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக்
கொண்டிருக்கக் கூடிய மனதின் பழக்கத்தை முறையாக
மாற்றிக் கொண்டு விளக்கத்தை நல் விளக்கமாக பெற்று
அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உள்ள
முறையான பயிற்சியே மனவளக்கலை"
மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்
மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான
மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும்
மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை
மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துரைந்து
மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்
மனவளகலையிதனைப் பரப்பி நலம் காண்போம்