Friday, March 30, 2018

Kundalini Yoga -What and Why in Tamil

1 மூலாதாரம்:

அந்தரங்க பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம் தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படையான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

2 சுவாதிஷ்டானம்:

இது அந்தரங்க பகுதிக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

3 மணிப்பூரகம்:

இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

4 அனாகதம்:

இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது?

5 விசுக்தி :

இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும். (ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்தப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப்பட்டிருப்பதை குறிக்கவோ என்னவோ, யாருக்குத் தெரியும்ப)

6 ஆக்கினை:

இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம் தான்.

7.சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்):

இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம் தான். இந்தக் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது. (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹாரம் தூண்டப்பட்ட நிலையைக் குறிக்கவே)

சக்கரங்களை தூண்டுவது எப்படி?.

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அறைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். வெகுசிலர் தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படிப அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும். பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு கொண்டு வரும் போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது.

செய்முறை…..

* முதலில் மூலபந்த நிலையில் உட்கார வேண்டும்.

* அந்த நிலையிலேயே சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.

* பின்னர் சுவாதிசுடானம், மனிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை ஆகிய ஒவ்வொரு சக்கரங்களிலும் எண்ணத்தை நிறுத்தி சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.

* கடைசியாக துரியத்தில் எண்ணத்தை நிலைப்பெறச் செய்ய வேண்டும்.

* உயிர் சக்தியைத் துரியம் அல்லது ஆக்கினையில் நிலைபெறச் செய்வதே குண்டலினி யோகம் எனப்படும்.

No comments:

Post a Comment