Wednesday, April 10, 2019

SUN ROTATIONS IN TAMIL


சூரியனின் சஞ்சாரத்தை வைத்து நம் முன்னோர்கள் உயிரின் இயக்கத்தைப் பற்றி ஆராய்ந்து தெளிந்தார்கள். சந்திரனின் இயக்கம் உடலையும், மனதையும் கட்டுப்படுத்துவது. சூரியன்தான் ஆன்மாகாரகன். சூரியன் இல்லை என்றால் சந்திரன் இல்லை. ஆன்மா இல்லை என்றால் உயிர் இல்லை, உடல் இல்லை, மனமுமில்லை. பிரபஞ்ச சக்திகளை நம் பூமிக்கு தன் கதிர்களின் மூலம் கொண்டு வருவது சூரியனே. சூரியன் இல்லை என்றால் எந்த உயிரினங்களோ, தாவரங்களோ பூமியில் இருக்காது. சூரியன் கொண்டு வரும் பல்வேறு பிரபஞ்ச சக்திகளை பூமியில் உள்ள அனைத்தும் தேவைக்கேற்பக் கிரகித்துக் கொண்டு இயங்குகின்றன. எனவேதான் சூரியனையே கடவுளாக ஆதி தமிழர்கள் வணங்கியிருக்கிறார்கள்.

சூரிய கலை, சந்திர கலை என்று மூச்சு மாறி ஓடும் போது நம் உடலின் இயக்கங்கள் எப்படி மாறியமைகின்றதோ, அது போல சூரியன் உதித்து தோற்றத்தில் இருக்கும் பொழுது ஒரு விதமாகவும், மறைந்து விடும் பொழுது வேறு விதமாகவும் பஞ்சபூதங்களின் சூக்கும இயக்கங்கள் மாறி அமைகின்றன. இந்த அடிப்படையில்தான் சிருஷ்டியின் இயக்கம் பூமியில் நடைபெறுகிறது. நம் உடலில் பகல் முழுவதும் உழைப்பு, உணவு போன்ற இயக்கங்கள் நடக்கின்றன. இரவு ஓய்வு மற்றும் சீரமைப்பு பணிகள், கழிவுகளை பிரித்தெடுத்தல் போன்ற பணிகள் நடப்பது போல, பூமியிலும் சூரியனை மையமாகக் கொண்டு இத்தகைய பணிகள் சூக்குமமாக நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய இயக்கங்களுக்குத் தேவையான அடிப்படை ஆதார சக்தியான பிரபஞ்ச சக்தியை பூமிக்குக் கொண்டு வருவது சூரியனே.

அது மறையும் பொழுது சந்திரன் ஓரளவு சூரியன் இல்லாத குறையை நிவர்த்தி செய்கிறது. பகல் முழுவதும் சூரியனின் சஞ்சாரத்தால் பூமி வெப்பமடைகிறது. அந்த வெப்பம் சூரியன் மறைந்த பிறகு அதிகாலை நாலு மணி அளவில்தான் குறைந்து பூமி குளிரும். வெப்பம் அதிகமாக இருக்கும்போது பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள பிராண சக்தி (Oxygen) விட குளிரும் பொழுது அதன் மூலக் கூறமைப்பு அதிகமாகி ஓசோனாக இருக்கும். நம் பிராண சக்தியானது சாதாரண நிலையில் இருப்பதை விட ஓசோனாக இருக்கும்போதுதான் மிகவும் சக்தியளிப்பதாக இருக்கும். எனவே, அதிகாலைப் பொழுதில் குளிர்ச்சியான தன்மையால் நம் பூமியின் நிலப்பரப்பில் அதிக அளாவில் ஓசோன் பிராண வாய்வு இருக்கும். இது சூரியன் எழும்பியதும் இந்நிலை மாறிவிடும்.

அதிகாலை 4.30 மணிக்கு நம் பெருங்குடலும், நுரையீரலும் புத்துணர்வு பெற்று செயல்படத் துவங்கும் காலமாக விஞ்ஞானம் சொல்கிறது. அந்த நேரத்தில் நம் பூமிப் பரப்பில் அதிக ஓசோன் வாய்வு கூடியிருக்கும் பொழுது நாம் விழித்து, காலைக் கடன் முடித்து நாம் யோகப் பயிற்சிகள் செய்யும் பொழுது நமக்கு நாள் முழுவற்கும் தேவையான புத்துணர்வு கிடைத்து விடுகிறது என்று சொல்லப்படுகிறது. இதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து சொல்வதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஆனால், நம் முன்னோர்கள் இந்த நுட்பத்தை எப்படி உணர்ந்து, அதிகாலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று சொன்னார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், அவர்கள் அறிவின் திறம் விளங்கும்.

மனிதன் இரவு முழுவதும் தூங்கி விட்டு, அதிகாலையில் எழும்போது அவன் புத்துணர்வு பெற வேண்டும் என்று இயற்கையானது தயாராக காத்திருக்கிறது. ஆனால், மனிதன் இதைப் புரிந்து கொள்ளாமல் தாமதமாக எழுந்து புத்துணர்வை இழந்து சிரமப்படுகிறான், நாள் ஒன்றுக்கு நாம் சுவாசிக்கும் 21600 சுவாசங்களும் ஒரு குறிப்பட்ட கால அளவு நமது ஒவ்வொரு ஆதரங்களிலும் நடைபெற்று, சஞ்சரித்து நம் உடல் மற்றும், மன இயக்கங்களை நிரவகித்து நம் வாழ்நாளை தீர்மானிக்கின்றன. காலை 6 மணியில் இருந்து 6.40 வரை மூலாதாரத்தில் 600 சுவாசம் ஓடுகிறது. காலை 6.40 லிருந்து மதியம் 1.20 வரை சுவாதிஷ்டானத்தில் 6000 சுவாசங்கள் ஓடுகின்றன. மதியம் 1.20 லிருந்து இரவு 8.00 மணி வரை மணிபூரகத்தில் 6000 சுவாசங்கள் ஓடுகின்றன. இரவு 8.00 மணி முதல் அதிகாலை 2.40 வரை அநாகதத்தில் 6000 சுவாசங்கள் ஓடுகின்றன. அதிகாலை 2.40 முதல் 3.40 வரை விசுத்தியில் 1000 சுவாசங்கள் நடை பெறுகின்றது. அதிகாலை 3.40 லிருந்து 4.53 வரை ஆகஞாவில் 1000 சுவாசங்கள் ஓடுகின்றன. அதன் பிறகு காலை 6 மணி வரை சகஸ்ராரத்தில் 1000 சுவாசங்கள் நடை பெறுகின்றன.

இதில் ஆக்கினையிலும், சகஸ்ராரத்திலும் சுவாசம் நடைபெறும் பொழுது யோகப் பயிற்சிகள், பிராணாயாமம், ஆசனப் பயிற்சிகள் செய்வதால் பலன் இரட்டிப்பாகும் என்று சொல்லப்படுகிறது. மற்ற எல்லாச் சக்கரங்களையும், நாடிகளையும் கட்டுப்படுத்தும் சுரப்பிகள் இந்த இரண்டு ஆதரங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் நாள் முழுவதும் அவற்றின் இயக்கங்கள் சீராக இருக்கும் என்பது நம் முன்னோர்களின் அறிவுரையாகும். மிர்தம் என்றால் அழிவு. அமிர்தம் என்றால் அழிவற்றது என்பது பொருள். பிரதோச வேளையில் பிரபஞ்ச சக்தி குறைவாகிப் போகிறது. எனவே அந்த வேளையில் பிரபஞ்ச சக்தியை கிரகித்து வழங்கும் கோவில்களுக்குள் இருப்பது நல்லது என்பது கோட்பாடு.

அது போல அதிகாலையில் பிராணவாயுவில் ஆக்சிஜன் மூலக்கூறு அதிகமுடைய ஓசோன் இருப்பதால் இந்த வேளைகளில் சாதனங்களைக் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். இதையே அமிர்தக் காற்று என்றும், ப்ரம்மக் காற்று என்றும் சொல்வார்கள். பர்ம்ம சக்தி அதிகமுடைய வேளையையே ப்ரம்ம முகூர்த்தம் என்று சொல்லும் வழக்கம் வந்தது. இதில் ப்ராணாயாமம் மற்றும் யோகம் செய்பவர்களுக்கு அமிர்தம் உண்டால் ஏற்படும் பலன்கள் கிட்டும் என்பது சூட்சுமம். சாதாரண வாயுவில் இரண்டு ஆக்சிஜன் மூலக் கூறுகளே இருக்கும். அதிகாலை ஓசோன் கலந்த வாயுவில் 5 ஆக்சிஜன் மூலக் கூறுகள் இருக்கும். இதில் பஞ்சபூதங்களின் சூக்கும சக்திகளான தன்மாத்திரைகள் கலந்திருக்கும். எனவே அவற்றால் உருவான நம் உடலும், உடல் தத்துவங்களும் இத்த வேளைகளில் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் சிறப்பாகச் செயல்படும்.

அதாவது இரண்டு ஆக்சிஜன் மூலக்கூறு கொண்ட வாயுவில் ப்ருதிவி, அப்பு என்ற இரண்டு பஞ்சபூதத் தன்மாத்திரைகளே கலந்திருக்கும். அதோடு மூன்று ஆக்சிஜன் மூலக்கூறு கொண்ட தேயு, வாயு, ஆகாயம் என்ற மூன்று பஞ்சபூதத் தன்மாத்திரைகள் கலந்த ஓசோன் என்கிற அமிர்தப் ப்ரம்ம வாயு கலந்திடும் போது ஐந்து மூலக் கூறுகள் கொண்ட அதிர்தக் காற்றாக மாறி அதில் ஆகாயம், ப்ருதிவி, அப்பு, தேயு, வாயு ஆகிய ஐந்து பஞ்சபூதத் தன்மாத்திலைகளும் கலந்திருக்கும். இந்த அமிர்தக் காற்றை முறைப்படுத்தி ஏற்றுக் கொள்பவன் தேவர்களுக்கும் மேலானவன் என்பது சித்தர்கள் வாக்கு.
விடியலைக் காணாதவன் வாழ்வில் விடிவு காலமே ஏற்படாது என்பதே உண்மை. எனவே வாசியோகம் பயில்பவர்கள் அதிகாலை வேளையில் பயிற்சி செய்வது சிறப்பு.

இனி நமக்குள் வாசியாக நின்று சிவனாடும் சண்ட தாண்டவத்தைக் குறித்து பார்ப்போம். என் மூக்குத் துவாரங்களில் மூச்சு சொரூபமாய் இருந்து நடனம் செய்து வரும் உன்னை அறியாமல் பல பிறவிகளாய் உயிரை இழந்து வருகிறேன் பூரணமே. இடது நாசியும், வலது நாசியும் இரண்டாகப் பிரிந்து மூக்குத் துவாரங்களுக்கு முடிவாகிய புருவ மத்தியில் மறுபடியும் ஒன்றாகச் சேர்ந்து நடத்துகின்ற மூச்சு எனும் நடனத்தை, காலைத் தூக்கி சித்திரப் பதுமை போல நிறுத்த வழியறியேன் பூரணமே. இதிலே கால் என்று குறிப்பிடுவது காற்றை. சித்திரப் பதுமை என்று குறிப்பிடுவது நடராஜரின் உருவத்தை.

என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க
உன்னை யறியாமல் உயிரிழந்தேன் பூரணமே
சக்திசிவம் இரண்டாகி தான்முடிவி லொன்றாகி
சித்திரமாய் சின்ற திறமறியேன் பூரணமே.

சங்குரெண்டு தாரையொன்று
ஜன்னல்பின்ன லாகையால்
மங்கி மாறாதே யுலகில்
மானிடர்க ளெத்தனை
சங்கு ரெண்டையும் தவிர்த்து
தாரைபூத வல்லிரேல்
கொங்கைமங்கை பங்கரோடு
கூடிவாழ லாகுமே.

வலது, இடது மூக்குத் துவாரங்கள் சேருமிடம் புருவமத்தி. அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளும் சேருமிடம். இந்த இடத்தையே திரிவேணி சங்கமம் என்பார்கள். நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் பின்னலாய்ப் பின்னி எழுந்து நின்று விளையாடுவது போல இடகலையும், பிங்கலையும் கூடி புருவமத்தியில் சுழுமுனையோடு சேர்ந்து விளையாடும் இரகசியங்களை தெரிந்து கொள்ளாமலேயே மாண்டு போன மானிடர்கள் பல கோடி உண்டு. வலது நாசி, இடது நாசி இரண்டிலும் மூச்சை தனித்தனியாக இழுத்து நடத்தி, நிறுத்தி பிறகு இரண்டு நாசிகளிலும் மூச்சை இழுத்து நடத்தி, நிறுத்த சக்தி உடையவர்களானால் பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு ஸ்தனங்களை உடைய உமாதேவியரோடு கூடி இருக்கும் சிவபெருமானைச் சேர்ந்து வாழலாம்.

நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு
நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமோடு நீகுளிக்கும்
வேதவாக்யம் கேளுமின்
நெருப்புநீரும் உம்முளே
நினைத்துகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத்
துடர்ந்துகூட லாகுமே.

மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி எனும் சக்தியை மூச்சு எனும் மூலக் கனலால் கிளப்பி உச்சி வரை ஏற்றி விடுவீர்களேயானால், அதனால் ஏற்படும் உஷ்ணத்தால் ப்ரம்ம கபாலத்தில் இருந்து அமிர்தமானது சுரக்கும். அதை உண்டு சுகித்து, லயித்திருக்கும் போது உடம்பெல்லாம் வியர்த்து குளித்து விட்டு வந்தது போல் இருக்கும். இதுவே இரகஸ்யம். அதாவது மூச்சு எனும் நெருப்பும், நெய் எனும் அமிர்தமும், வியர்வை எனும் நீரும் நம்மிடத்திலே இருப்பதை யோகத்தால் அறிந்து, சொல்ல வல்லமை உடையவர்களானால், எல்லை கடந்த ஜோதியாகிய ப்ரம்மத்தில் கலந்திருக்கலாம்.

இந்த மூச்சு எனும் சூக்கும நிலையை உணர்த்தும் பொருட்டே காலைத்(காற்று) தூக்கி நடனம் ஆடுவது போல நடராஜர் சிலையை வடிவமைத்தனர் முன்னோர்கள். பரம் என்றால் ஆகாயம் அல்லது விண் அல்லது வெட்டவெளி பரமசிவம் என்றால் பரமாத்மா. பரமசிவமான பரமாத்மா நடனம் ஆடுவது போலக் காட்சி தரும் சித் + அம்பரம் சிதம்பரம் ஆகாயத் தத்துவத்தை உணர்த்தும் தலமாகும். அங்கே பக்தர்களுக்குக் காட்டப்படும் சிதம்பர இரகசியமும் வெட்டவெளியாகிய பரத்தைக் குறிப்பதே. அதாவது விண் என்கிற வெட்டவெளி. விண்ணே உயிராக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கியும், பிறகு வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியும் நடனமாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று வலது காலைக் காது வரை நீட்டி இடது கையை மேல் தூக்கி நடனம் ஆடும் போது போட்டியாக உடன் ஆடிய காளியானவள் காலைக் காது வரைத் தூக்க வெட்கம் அடைந்து தோல்வியை ஒப்புக் கொண்டதாக புராணக் கதை சொல்வார்கள். அந்தக் கதையின் உள் நோக்கத்தை சொல்வார் யாருமில்லை.

ப்ராணாயாமம் அல்லது சந்தியாவந்தனம் செய்பவர்கள் முதலில் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதற்காகவே நடராஜர் வலது காலைத் தூக்கி நடனம் ஆடுவது போலக் காட்டப்பட்டது. பிறகு வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதே நடராஜர் இடது காலைத் தூக்கி நடனம் ஆடுவது. உலைக்களத்தில் இரண்டு தோல் துருத்திகளை வைத்து இரண்டு கைகளால் மாற்றி மாற்றி அமுக்கி ஊதுவது போல வலதுகைப் பெருவிரல் மோதிர விரல்களை வலது இடது நாசிகளில் வைத்து, இரண்டு நாசிகள் வழியாகவும் ஒன்றை அடைத்து ஒன்றன் வழியாக மாற்றி மாற்றி காற்றை உள் இழுத்து நிறுத்த வேண்டும். இரண்டு மூச்சுகளையும் பின்னலாய் பின்னி உள்ளிருத்து நிறுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதே நடராஜர் ஒற்றைக் காலை காது வரை மேலே தூக்கி ஆடுவது போலக் காட்டப்படுவது.

குண்டலினி சக்தியே காளியாகச் சொல்லப்படுவதாகும். முறையாகப் பிராணாயாமம் செய்து வந்தால் அவள் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு உச்சி நோக்கி பயணிப்பாள் என்பதாகும். ஜீவாத்மா பரமாத்மாவை அடையத் தடையாக இருக்கும் மலங்கள் அனைத்துமே அரக்கனாக சித்தரிக்கப் படுகிறது. மூச்சுக் காற்றினால் குண்டலினியை மேலேற்ற முடியுமானால் நம் மேன்மைக்குத் தடையாக இருக்கும் மல மாயங்களாகிய அரக்கனை பரமாத்மாவானது அழித்துவிடும் என்றும் சித்தரிக்கப் பட்டுள்ளது. நாம் விடும் மூச்சுக்கு கால் எனறும் நூல் என்றும் பெயர் உண்டு. நூல் என்றோ ஒரு நாள் அறுபட்டு விடும் எனவே காலாகிய காற்றைப் பிடித்து மேலேறி வரவேண்டும் என்பதை விளக்குவதே நடராஜர் தத்துவம். அவர் காட்டுகிற அனைத்து நடனங்களும் யோகத் தத்துவங்களை உணர்த்துவதேயாகும்.

ஒருபாதந் தன்னைத் தூக்கி யொருபாதந் தன்னை மாற்றி
இருபாத மாடுகின்ற வியல்பைநீ யறிந்தா யானால்
குருபாத மென்று கூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
விருபாத னாகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே.

இறந்திடு மிருபத் தோரா யிரத் தறுநூறு பேறும்
இறந்திடு மிக்காயம் போனா லீசனைக் காண்ப தென்னாள்
மறந்திடா தறிவான் மூல வாசியை மேலே யேற்றிச்
சிறந்த தற்பரத்து நாகை லிங்கரைத் தரிசி நெஞ்சே.
- நெஞ்சறி விளக்கம்.

இருபத்தோராயிரத்தறநூறு பேரும் என்பது நாம் தினசரி சுவாசிக்கும் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். குருபாதம் கூறும் குறிப்பு என்றால் குரு சொல்லிக் கொடுக்கிற படி செய்தால் சூக்குமம் விளங்கும். இருபாத நாகை நாதர் என்றால் இடகலை, பிங்கலை வழியாக நடக்கும் நாகன் எனும் மூச்சைக் காட்ட கால்களைத் தூக்கி நடனஞ் செய்த நடராஜரது மலரடிகளைக் காண்பாய் நெஞ்சே. அதாவது அவர் காட்டும் வழியில் அல்லது அவர் கால்கள்(காற்று)போகும் வழியில் போய் பரத்தைக் காண்பாய் நெஞ்சே. உயர்வாய் இருந்து தான் தானாய் நடந்து கொண்டிருக்கும் நாகனென்னும் லிங்கத்தை அறிவாய் நெஞ்சே.

திரிவேணி சங்கமமெனும் மூன்று நாடிகளும் சந்திக்குமிடத்தில் லிங்கம் உள்ளது. அங்கே மூச்சை கொண்டு போய் நிலை நிறுத்தும் பொழுதுதான் வாசி வசப்படும். மூக்கு வழியாக இழுத்து, அண்ணாக்குக்குத் துவாரங்கள் வழியாக விடும் பொழுததான், வாசி புருவ மத்தியில் இயங்கும். இந்த வித்தைகளை குருமுகமாகக் கற்றுணர்ந்து வாசியை சகஸ்ரதளத்தை நோக்கி செலுத்தி மேன்மையடையலாம். இதற்கு அதிகாலை நேரம் மிக மிக உகந்ததாகும். இதில் சில ஐயப்பாடுகள் எழுகின்றன. ப்ராணாயாமம் வேறு, வாசி யோகம் வேறா ? என்று கேட்கிறார்கள். பல வகையான ப்ராணாயாமங்கள் இருக்கின்றன. வாசி யோக சாதகர்களுக்கு ப்ராணாயாமம் நல்ல அடிப்படையாக அமையும். அதே சமயம் ப்ராணாயாமம் என்பது மூச்சை ஒழுங்குபடுத்தி, அதன் பலனைத் தருவிப்பது. வாசி யோகம் என்பது சிவசக்தி ஐக்கியத்தை, சிவபோகத்தை ஏற்படுத்துவது. இந்த அளவில் இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை அறிந்து கொண்டால் போதுமானது.

Sunday, January 13, 2019

Panchangam in Tamil


Panchangam in Tamil
https://www.facebook.com/sivaramanan1412/videos/593386081116440/UzpfSTEwMDAxMDkwOTQ1Njc2NTo3NjEyNDA4MDQyNTEwNjY/

Tuesday, January 1, 2019

The Breathing Techniques - In Tamil

சர கலை ரகசியங்கள்
************************
பதிவு நீளம் பெரிதாக இருக்களாம், இருப்பினும் ஒருமுறைக்கு பலமுறை ஊன்றி படிக்கவும். காரணம் என்னவென்றால் ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் இந்த சரவித்தையை தெரிந்துவைத்து கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது.
நாள், கோள், நட்சத்திரம் இவை முதலான சோதிட நுட்பங்கள் எதுவுமே அறியாதவர்கள் தங்கள் மன நினைவினாலே ஐயங்களை தீர்த்துக் கொள்ள ஏதேனும் வழி உள்ளதா?? என்று உமாதேவி கேட்க!! அதற்கு சிவபெருமான் உபதேசித்த கலையே சரகலை அல்லது சரவித்தை.
கலைகளிலேயே முதன்மையானதும் சிறப்பானதும் இந்த சரகலைதான் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு. காலை எழுந்தது முதல் இரவு உறங்கப்போகும் வரை உங்களுக்கும், உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் என்ன நடக்கப் போகின்றது என்பதை இந்த சரகலையை கொண்டு 100% சரியாக கணித்துவிடலாம். உங்களிடம் ஒருவர் நல்லதுக்காக வருகிறாரா?? அவர் பேசுவது உண்மையா?? இந்த நாள் உங்களுக்கு எப்படி?? போகும் காரியம் வெற்றி பெருமா?? என அனைத்தையும் துள்ளியமாக கணித்துவிடலாம்.
சரம் என்றால் சுவாசம் என்று பொருள். பொதுவாக நமது சுவாசம் மூன்று விதமாக இயங்குகின்றது. அதாவது சுவாசம் இடது பக்கமாக ஓடினால் இடகலை அல்லது சந்திரகலை என்றும், வலது பக்கமாக ஓடினால் பின்கலை அல்லது சூரியகலை என்றும், இரண்டிலும் ஓடினால் சுழுமுனை என்று கூறுவர். இந்த சுழுமுனை சுவாசம் ஓடினால் எந்த வேலையும் செய்யாமல் தியானத்தில் மட்டும் அமர்ந்திருப்பதே நல்லது, மற்ற வேலைகள் செய்தால் நடக்காது. சுவாசம் வலது பக்கமாக ஓடினால் உடலால் செய்யும் கடினமான வேலைகளை செய்வது சிறந்தது. சுவாசம் இடது பக்கமாக ஓடினால் மனதால் செய்யும் வேலையே சிறந்தது. மேலும் சுவாசம் எந்த பக்கம் ஓடுகின்றதோ அதை பூரணம் என்றும், சுவாசம் ஓடாத பக்கம் சூனியம் என்றும் வகுத்துள்ளனர்.
உதாரணத்திற்கு உங்களுக்கு வலது பக்கம் சுவாசம் ஓடுகின்றது என்று வைத்து கொண்டால், வலது பக்கத்தை பூரணம் என்றும், சுவாசம் ஓடாத இடது பக்கத்தை சூனியம் என்று பொருள் கொள்ள வேண்டும். சரமாகிய சுவாசம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தில் தொடங்க வேண்டும் என்ற விதியுள்ளது. அது யாதெனில் திங்கள், புதன், வியாழன்(வளர்பிறை), வெள்ளி ஆகிய நாட்களில் சுவாசம் இடது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும். அதே போல் செவ்வாய், வியாழன்(தேய்பிறை), சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுவாசம் வலது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும். ஒருவேலை அந்த நாளுக்குரிய சரம் ஓடாமல் வேறு சரம் ஓடினால் நோய், பொருள் இழப்பு, மனக்கஷ்டம் போன்றவை ஏற்படும். உதாரணதிற்கு திங்கள் அன்று சுவாசம் இடது பக்கம் தொடங்காமல் வலதில் தொடங்கினால் நோய் உண்டாகும்.
ஒருவருடைய சரம் சரியாக இயங்குகின்றது என்பதை எப்படி கண்டுணர்வது என்றால், காலையில் கண்விழித்த உடனே உங்களது சரம்(சுவாசம்) அந்நாளுக்குரிய சரத்தில் ஓடுகின்றதா?? என்று கவனியுங்கள். அப்படி ஓடினால் அந்நாள் உங்களுக்கு நன்மையான நாள். உதாரணதிற்கு திங்கள் அன்று கண்விழித்த உடனே உங்கள் சுவாசத்தை கவனித்தால் இடதுபக்கத்தில் ஓடி கொண்டிருக்க வேண்டும். அதற்கு பிறகு சுவாசம் எந்த பக்கம் வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் அப்படி ஓடாமல் திங்களன்று சூரியனுக்குரிய வலதுகலையில் தொடங்கினால் நோய் ஏற்படுவது 100% உறுதி. எழுந்த உடனே சுவாசத்தை கவனித்து சரத்தை மாற்ற கற்றுக்கொண்டால் நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
அக்காலத்தில் முனிவர்கள் கையில் தண்டம் என்ற ஒன்றை வைத்திருப்பார்கள். அது இந்த சுவாசத்தை மாற்ற உதவும் கருவியே தவிர வேறு ஒன்றுமில்லை. சுவாசத்தை எப்படி மாற்ற வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள் உண்டு. அவை
1. படுக்கையிலிருந்து எழும்போது எந்த காலை முதலில் தரையில் அழுத்தி ஊணுகின்றீர்களோ அந்த பக்கம் சுவாசம் மாறிக்கொள்ளும்.
2. படுக்கையிலிருந்து எழாமல் எந்த பக்கம் ஓடவேண்டுமோ அதற்கு எதிர் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டு சுவாத்தை கவனிக்க வேண்டும். உதாரணதிற்கு வலது பக்கம் சரம் ஓடவேண்டும் என்று வைத்துக் கொள்வோம், உடனே இடது பக்கமாக திரும்பி படுத்து, இடது கையை மடித்து தலைக்கு கீழே வைத்து, கால்களை நீட்டி வலது கையை வலது தொடை மீது வைத்துக்கொண்டு உங்கள் சுவாசத்தை கவனித்தால், தானாகவே சுவாசம் வலது கலைக்கு மாறிகொள்ளும்.
3. அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து இடது தொடை மீது வலது காலைப் போட்டு உட்கார்ந்தால் சுவாசம் வலதில் மாறியோடும். இதுவே கால்மேல் கால் போட்டு உட்காரும் முறை. ஷிரடி பாபா படத்தை பார்த்தால் புரியும்.
4.அல்லது உட்காரும்போது இடது கையை தரையில் அழுத்தி சற்று இடது பக்கம் சாய்ந்தவாறு உட்கார்ந்தால் சரம் வலதில் மாறியோடும்.
5.அல்லது இடது அக்குலில் ஒரு கணமான துண்டை மடித்து வைத்து கொண்டால், சுவாசம் வலதில் மாறிக்கொள்ளும்.
இவை அனைத்தும் சூரிய உதயத்திற்கு 20 நிமிடத்திற்கு முன்போ அல்லது உதயத்திற்கு பின் 20 நிமிடத்திற்கு உள்ளாகவோ செய்து கொண்டால் கூட போதுமானது. பிரம்ம முகுர்த்தத்தில் செய்தால் மிக்க பயன் உண்டு, அதாவது சூரிய உதயத்திற்கு 1 1/2 (4.30 A.M)மணி நேரத்திற்கு முன் உள்ள காலம்.
சுவாசத்தை கவனித்தல் என்பது இயற்கையான தியான முறையாகும். எனவே இதில் தியானமும் அடக்கம். புத்தரின் விபாசான சுவாசத்தை என்னேரமும் கவனித்தலே ஆகும். இப்படி கவனிப்பதால் சரம் இடம்,வலம்,சுழுமுனை என மாறுவதை கவனிக்க முடிவும். மேலும் சுழுமுனை சுவாசம் ஓடும்போது கவனித்தலே தியானமுறைகளில் சிறந்தது, இதற்கென்று வேறு எதுவும் தேவையில்லை. இப்படி கவனிக்கும் போது உங்களை சுற்றி என்ன நடக்கின்றது?? எது உண்மை?? என அனைத்தையும் துள்ளியமாக கண்டறிய முடிவும்.
அது எப்படி?? ஒருவர் உங்களிடம் பேசுகின்றார் என்றால், அவர் எந்த பக்கத்தில் வந்து நிற்கின்றார் என கவனிக்கவும். அதாவது உங்களின் வலது பக்கமாவா? அல்லது இடது பக்கமாவா? என்று கவனிக்கவும். அவர் உயரமான இடத்தில் நின்று பேசினாலோ அல்லது உங்களிடம் நேருக்கு நேர் நின்று பேசினாலோ அல்லது இடது பக்கத்தில் நின்று பேசினாலோ உங்களின் இடது பக்கத்தில் நிற்கின்றார் என கொள்ளவேண்டும். இதுவே உங்கள் வலது பக்கத்தில் நன்றாலோ அல்லது உங்களை விட தாழ்வான இடத்தில் நின்றாலோ அல்லது உங்களுக்கு பின்னாடி நின்றாலோ உங்களின் வலது என கொள்ளவேண்டும். இப்படி வலது, இடது என்பதை வைத்தே அனைத்தையும் கணித்து விடலாம். முன்பே கண்டது போல பூரணம் என்பது சரம் ஓடும் பக்கம், அதுபோல் ஓடாத பக்கம் சூனியம். ஒருவர் சரம் ஓடும் பக்கம் நின்று எதாவது பேசினால் அல்லது கேட்டால் அது உண்மை மற்றும் நடக்கும் என்று பொருள், ஓடாத பக்கம் நின்றால் அது பொய் மற்றும் நடக்காது என்று பொருள். இது போன்று சகலத்தையும் துள்ளியமாக கணிக்கலாம்.
திசைகளில் சூரியனுக்குரிய திசை கிழக்கு மற்றும் வடக்கு ஆகும். அதுபோல் சந்திரனுக்குரிய திசை மேற்கு மற்றும் தெற்கு ஆகும். ஒருவருக்கு சரம் வலதில் ஓடும் காலத்தில் சூரியனுக்குரிய திசையில் பயணம் செய்தால் காரியம் நன்மையில் முடியும். அதுபோல் இடதில் ஓடினால் சந்திரனுக்குரிய திசையில் செல்வது நல்லது. சந்திரன் ஓடும்போது சூரியதிசையிலோ அல்லது சூரியன் ஓடும்போது சந்திரதிசையிலோ சென்றால் காரியம் சித்திக்காது.
சூரியசரம் நடக்கும்போது அதற்குரிய திசையில் செல்லாமல் மாறாக செல்லவேண்டும் என்றால் வலது காலை முன்வைத்து ஒற்றையடியாக மூன்றடி தூரம் நடந்துவிட்டுப் பயணத்தை தொடங்க வேண்டும்.இதேபோல் சந்திரசரத்திற்கு இடதுகாலை முன்வைத்து செல்ல வேண்டும். இரண்டுசரமும் ஒன்றாக நடந்தால் இரண்டு கால்களையும் ஒன்றாகக் கூட்டிவைத்து மூச்சடக்கி தத்தித்தத்தி மூன்றுமுறை சென்றுபின் பயணம் செய்ய வேண்டும்.
அதேபோல் ஒரு நல்ல ஒழுக்கநெறியுள்ள உயர்ந்த மனிதரை சந்திக்கும் போது உங்களில் பூரண பக்கத்தில் அவர் உள்ளபடி நின்றுகொண்டால் மிக்க நன்மை தரும். அதேபோல் வழக்கு, தீயவர் போன்றோரை சந்திக்க நேர்ந்தால் உங்களின் சூனிய பக்கத்தில் அவர் உள்ளபடி செய்து கொண்டால் அவர் பலம் குன்றிவிடும்.
கோவிலுக்கு செல்லும்போதும் உங்கள் பூரணபக்கம் சுவாமியும், சுவாமியின் பூரணபக்கம் நிங்களும் இருந்தால் மிக்க பலன் உண்டு. அந்தந்த நாளுக்குரிய சரம் சுவாமிக்கு முழுவதுமாக ஓடுவதாக கணக்கில் கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை- உலகையே ஆண்டுவந்த ராஜவம்சத்தினர் இன்று இருந்த தடம் தெரியாமல் அழிந்து மண்ணான காரணம், இது போன்ற தெய்வ கலையை தவறாக தன் சுயநலத்திற்காக பயன்படுத்தினதால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
"சரம் பார்ப்பவனிடம் சரசம் கொள்ளாதே" என்பது முன்னோர் வாக்கு. ஏன்னென்றால் " சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பவன் ஆவான்". எனவே நல்லவழியில் இதை பயன்படுத்தினால் தெய்வத்திற்கு நிகராக கொண்டு செல்லும் என்பது உறுதி.
குறிப்பு- அடிப்படை சரவித்தையை மட்டுமே இங்கு பதிவுசெய்ய பட்டுள்ளது. அனைத்தும் தெரிய வேண்டும் என்றும் படத்தில் உள்ள புத்தகத்தை கையில் வைத்து கொள்ளுங்கள். மேலும் சரவித்தையை குருமுகமாகதான் மட்டுமே கற்க வேண்டும் என்று சொல்வார்கள். அதை நம்ப வேண்டாம். இலவசமாக கிடைத்தால் கற்று கொள்ளுங்கள். பணம் கொடுத்து கிடைத்தால் இதையேதான் சொல்ல போகிறார்கள். முன்பே கூறியது போல் "சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பவன்". பணம் பார்ப்பவன் அல்ல. குருவின் மீதும் திருவின் மீதும் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள். மற்றவை தானாகவே வந்து சேரும்.இயற்கையும் இறைவனும் கண்டிப்பாக ஒருவனுக்கு நன்மையை மட்டுமே செய்வார்கள்.
வருடத்தில் எல்லா நாட்களும் எல்லா நேரங்களிலும் சரம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இருந்தாலும், சரம் தானாகவே சரியாக நடக்க ஒரு வழி உண்டு. அதாவது சரம் பார்ப்பதில் நாள் சரம், நட்சத்திர சரம், திதி சரம், பஞ்சபூத சரம் மற்றும் அயன சரம் என்ற முறைகள் உண்டு. இதில் அயன சரத்தை தவிர மற்ற எல்லா சரங்களும் அடிக்கடி பார்த்து சரிசெய்வது. ஆனால் அயன சரம் மட்டும் வருடத்தில் இரண்டே நாட்கள் மட்டுமே பார்க்க முடியும். மேலும் இந்த இரண்டு நாட்களில் சரத்தை சரியாக நடக்கவிட்டால் போதும், வருடத்தில் எல்லா நாட்களிலும் சரம் சரியாக நடக்கும்.
ஆடி மாதம் முதல் தேதி முதல் சூரியன் தெற்கு நோக்கி நகரும் தட்சிணாயண காலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் காலம் தை மாதம் முதல் தேதி முதல் உத்தராயண காலம் என்றும் சொல்வர். அயனம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் பகலில் ஒருபொழுது மட்டுமே உணவு உண்டு பரிசுத்தமாக இருந்து மறுநாள் உத்தராயண மாகிய தைமாதம் முதல் தேதி பொழுது விடிவதற்கு முன் ஐந்து நாழிகை இருக்கும்பொழுது சரம் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது எந்த நாளாக இருந்தாலும் கவனிக்க தேவையில்லை. சரம் இடதுபக்கமாக ஐந்து நாழிகை நேரம் சிதறாமல் ஓட வேண்டும். தட்சிணாயணம் ஆடி மாதம் முதல் தேதியானால் சரம் வலது பக்கத்தில் ஐந்து நாழிகை நேரம் சிதறாமல் ஓட வேண்டும். அவ்வாறு சரம் ஓடினால் வருடத்தில் எல்லா நாட்களும் நலமாக அமையும்.
இந்த சரவித்தையை படிப்பதோடு மட்டும் விட்டுவிடாமல் உங்கள் வாழ்க்கையில் இதை ஒரு அங்கமாக கொண்டால் அனைத்தும் நன்மையாகவே நடக்கும் என்பது உறுதி.
- சித்தர்களின் குரல் shiva shangar

Saturday, September 8, 2018

SKY Yoga Introductions for New Comers

மனமே விளைநிலம்"..
.
மனவளக்கலையின் (Simplified Kundalini Yoga) நான்கு அங்கங்களான -
1] தவம் (Meditation),
2] அகத்தாய்வு (Introspection),
3] குணநலப்பேறு (Sublimation),
4] முழுமைப்பேறு (Perfection),
.
ஆகிய நான்கிற்கும் 'மனமே' விளைநிலம். மனம் (Mind) தன் திறமையையும் வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சியே "தவமாகும்" (Simplified Kundalini Yoga) .
.
மனம் தன்னைத் தூய்மை செய்து கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சியே "அகத்தாய்வாகும்" (Introspection).
.
அந்தத் தூய்மையில் மேலும் மேலும் மனம் தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதே "குணநலப்பேறு" (Sublimation) ஆகும்.
.
தூய்மையில் பூரணத்தை அடைந்து அமைதியாக இருப்பதுவே "முழுமைப்பேறு" (Perfection) ஆகும்.
.
இந்தப் பயிற்சியைச் செய்யத் தொடங்கினோமானால் மனத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு, தன்னைப்பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டு, மனித சமுதாயத்தைத் தெரிந்து கொண்டு இயற்கையை அறிந்துகொண்டு பூரணத்தைப் (Perfection) பெற்று வாழ்வாங்கு வாழ முடியும் என்ற ஒரு தெளிவைப் பெற்றபின்பு, ஒரு புதிய வெளிச்சம் வாழ்க்கையில் வந்தமாதிரியான ஒரு உணர்வும் உறுதிப்பாடும் நம்பிக்கையும் உண்டாகும். இந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு தானும் சிறப்பாக வாழ்ந்து பிறரையும் சிறப்பாக வாழ வைக்க முடியும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
For contacts :

Friday, March 30, 2018

Kundalini Yoga -What and Why in Tamil

1 மூலாதாரம்:

அந்தரங்க பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம் தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படையான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

2 சுவாதிஷ்டானம்:

இது அந்தரங்க பகுதிக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

3 மணிப்பூரகம்:

இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

4 அனாகதம்:

இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது?

5 விசுக்தி :

இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும். (ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்தப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப்பட்டிருப்பதை குறிக்கவோ என்னவோ, யாருக்குத் தெரியும்ப)

6 ஆக்கினை:

இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம் தான்.

7.சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்):

இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம் தான். இந்தக் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது. (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹாரம் தூண்டப்பட்ட நிலையைக் குறிக்கவே)

சக்கரங்களை தூண்டுவது எப்படி?.

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அறைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். வெகுசிலர் தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.

அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படிப அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும். பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு கொண்டு வரும் போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது.

செய்முறை…..

* முதலில் மூலபந்த நிலையில் உட்கார வேண்டும்.

* அந்த நிலையிலேயே சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.

* பின்னர் சுவாதிசுடானம், மனிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை ஆகிய ஒவ்வொரு சக்கரங்களிலும் எண்ணத்தை நிறுத்தி சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.

* கடைசியாக துரியத்தில் எண்ணத்தை நிலைப்பெறச் செய்ய வேண்டும்.

* உயிர் சக்தியைத் துரியம் அல்லது ஆக்கினையில் நிலைபெறச் செய்வதே குண்டலினி யோகம் எனப்படும்.

The method -to Bath- Cure for Astuma....in Tamil

ஒரு மருத்துவரின் பதிவு
நாட்பட்டஆஸ்துமா விற்கு. ...
பொதுவாக மருத்துவர்களாக நாம் தான் நோயாளிகளுக்கு கற்றுத் தருவோம். என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் நான் இப்போது பகிர இருப்பது.ஒரு நோயாளி எனக்கு கற்றுத் தந்தது. .
அதாவது எனது ஒரு பழைய ஆஸ்துமா நோயாளியை பல மாதங்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது.
.52 வயது ஆண்.
அவருக்கு ...
என்னிடம் மருத்துவம் பார்த்த காலங்களில் ஆஸ்துமா நோய் குறிகுணங்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது.
ஆனால் தற்போது அவர் கிட்டத்தட்ட ஆஸ்துமா வில் இருந்து பூரண குணம் கண்டிருப்பதைக் கண்டேன்.
அவரிடம் விசாரித்தேன்.
பெரிய மருந்துகள் எதுவும் சாப்பிட்டீர்களா? என்று.
அதற்கு அவர்.
அப்படி மருந்து எதுவும் சாப்பிடவில்லை சார்.
இடையில் ஒரு வயது முதிர்ந்த சாதுவை சந்திக்க நேர்ந்தது. .அந்த சாதுவிடம் எனது பிரச்சனையை கூறினேன். .
அவரோ...
"உனது பிரச்சனைக்கு emergency க்கு எந்த முறை மருத்துவம் ஆனாலும் எடுத்துக்கொள்.
கூடவே நான் சொல்லும் ஒரு பயிற்சியை மட்டும் அன்றாடம் பழக்கப்படுத்து என்றார்.
அதாவது ..
.அன்றாடம் காலையில் குளிக்கும் போது. ..
1) *அன்றாடம் தலைக்கும் சேர்த்து குளி*.
2) *வெந்நீர் வேண்டாம். அதிக குளிர்ச்சி இல்லாத பச்சை தண்ணீரில் குளி*
3) பொதுவாக குளிக்க ஆரம்பிக்கும் முன்பு உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் தண்ணீரில் நனைத்த பிறகு வாயில் தண்ணீர் விட்டு கொப்பளித்து உமிழ்ந்து,
முகம் கழுவிய பிறகு குளிக்க துவங்க வேண்டும்
4) குளிக்கும் முன்பு வாயில் ஒரு மடக்கு தண்ணீர் விட்டு வாயை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும். குளித்து முடிக்கும் வரை மூடிய வாயைத் திறக்கக்கூடாது.
5) *குளித்து முடித்து உடல் முழுவதும் துவட்டி ஈர உடை அவிழ்த்து வேறு உடை இடுப்பில் உடுத்திய பிறகு வாயில் உள்ள நீரை உமிழ்ந்து விட்டு ,ஒரிரு முறை தண்ணீர் விட்டு வாய் கொப்பளித்து சகஜமான சுவாசத்திற்கு வரவேண்டும்*
இவ்வளவு தான் உனது பயிற்சி. இதை பழக்கம் ஆக்கு.
பணம் செலவு இல்லை. தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை.
அதாவது குளிக்கும் முழு நேரமும் வாயினால் சுவாசிப்பதைத் தவிர்த்து மூக்கினால் மட்டுமே சுவாசிப்பதை கட்டாயமாக்கும் ஒரு பயிற்சி இது.
ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தான இருக்கும். .பழகப்பழக எளிமையாக பழக்கப்படும்.
இதைமட்டும் பழக்கபடுத்து என்று சொன்னார் அந்த சாது.
நானும் நம்பிக்கையுடனும், வைராக்கியத்துடன் சாது கூறிய பயிற்சியைத்
தொடங்கினேன்..
ஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்தது.சில நேரங்களில் மூக்குக்குள் தண்ணீர் போய் மூச்சு விட பரிதவித்து இருக்கிறேன். .
இடையிடையே வாய் நீரைத் துப்பி வாய் மூலமாக சுவாசித்து இருக்கிறேன். .
இருந்தாலும் சாது கூறியது பொய்யாக இருக்காது. .நான் என்ன தவறு செய்கிறேன் என்று யோசித்து பார்த்தேன். .
எனக்கு ஒரு சூட்சுமம் புரிந்தது..
அதாவது தலையில் இருந்து தண்ணீர் வடியும் போது மூச்சை உள் இழுக்கும் (பூரகம்)போது தான் மூக்குக்குள் தண்ணீர் போய் சிரமப்படுத்துகிறது..
தண்ணீர் வடியும் போது சுவாசத்தை வெளியே விடுவதில்(ரேசகம்) சிரமம் ஒன்றும் இல்லை.
எனவே சுவாசத்தை நன்றாக உள் இழுத்ததும் தலையில் தண்ணீர் ஊற்றினேன்.
தண்ணீர் வடியும் போதே சுவாசத்தை மெதுவாக வெளியே விட்டேன். .
ஆச்சரியம் குளிக்கும் போது மூக்கு வழி சுவாசம் எளிமையானது..
கடந்த ஆறு மாதமாக
இந்த பயிற்சியை எனது அன்றாடப் பழக்கம் ஆக்கிவிட்டேன்..
தற்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இல்லை .
இவை தான் எனது அந்த பழைய ஆஸ்துமா நோயாளி கூறியது.
இல்லையில்லை தற்போது அவர் நோயாளி இல்லை. .
எனக்கு ஆச்சரியமும்,ஆர்வமும் அதிகமானது..
எனது புரிதல். .
நுரையீரலை அதன் இயற்கையான தொழிலான சுவாசித்தல் மூலமாகவே வலிமைப் படுத்த இது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கருதினேன்.
நானே குளிக்கும் போது இதைக்கடைபிடிக்கத் தொடங்கினேன் ..
சிரமம் இல்லை. நுரையீரல் வலிமை பெறுவதாக உணர்கிறேன். நம்புகிறேன்.
இன்றைய சூழ்நிலையில் எப்பொழுதும் மூக்கின் வழியாகவே சுவாசிக்க வேண்டும் என்ற உண்மையை
உணர்த்த உதவுகிறது
பொதுவாக நமது உடலில் தசைகளுக்குத் தெரிந்த, செய்ய முடிந்த ஒரே தொழில் சுருங்குதல் மட்டுமே அல்லவா. .
சுருங்கும் அல்லது எதிர்வினை தசைகளுக்காக சுருங்காமல் நெகிழ்ந்து கொடுக்கும் ...
தசைகளுக்கு தாமாகவே நீள அல்லது விரியத் தெரியாது. .
உடல் முழுவதும் இயங்கிக்கொண்டு இருப்பதால் தசைகள் மாறி மாறி சுருங்கிக் கொண்டே இருக்கின்றன.அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஆக குளிர்வித்தல் அவசியமாகிறது.
குளிர்ச்சியானது....... தசைகளை அதன் இயற்கை தொழிலான சுருங்கும் தொழில் சிறப்பாக நடை பெற உதவுகிறது.
சூடு ,வெப்பம் தசைகள் இயற்கை தொழிலான சுருங்கும் தன்மையைச் செய்ய விடாமல் எதிரான செயலைச் செய்விக்கிறது..
ஆக குளித்தல் /குளிர்வித்தல் என்பது தசைகளை வலிமை படுத்த அவசியம் என்பது புரிகிறது.
.......படித்தது,பகிர்கிறேன்!